திருமணம் ஆகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதன் பின்னர் அவர் தன் குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் நடிகர் மாதவனை சந்தித்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர அது வைரலாகி வருகிறது. இருவரும் இணைந்து நடித்த அலைபாயுதே படம் சூப்பர் ஹிட் ஆகி, அவர்களை பிரபலமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.