சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்வாக இயங்கும் அஜித்… தினம் தினம் கொட்டும் அப்டேட்கள்!

vinoth

வியாழன், 24 அக்டோபர் 2024 (12:39 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பின்னர் அவர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள போவதாக உறுதி செய்யப்பட்ட தகவல்லள் வெளியாகி வருகின்றன.  அவரின் சக நடிகர்கள் மற்றும் கார் ரேஸர் நரேன் கார்த்திகேயன் போன்றோர் இதற்காக அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே போல அவர் தன்னுடைய பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

இப்படி அவருடைய தினசரி செயல்களை எல்லாம் சமூகவலைதளங்களில் அவ்வப்போது அவரது குழு வெளியிட்டு வருகிறது. சுரேஷ் சந்திரா மற்றும் ஷாலினி ஆகியோரின் சமூகவலைதளப் பக்கங்களில் இருந்து தினம் தினம் புகைப்படங்களும் வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் தற்போது அஜித் பைக் சுற்றுலாவில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்