எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

vinoth

வியாழன், 27 மார்ச் 2025 (11:08 IST)
ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.

அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரபலங்களை நேர்கானல் செய்யும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஷகீலா தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அது பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் “எல்லோரையும் போல நானும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் வந்தவர்களளில் ஒருவர் நான்கு வருஷம் இருந்தார், ஒருவர் இரண்டு வருஷம் இருந்தார். ஒருவர் ஆறு மாதம் இருந்தார். அதன் பின்னர் ஓடிப் போய்விட்டார்கள். நான் என் குடும்பத்தைப் பற்றி அதிகமாக யோசித்ததுதான் என்னை சுற்றி இருந்தவர்கள் என்னிடம் இருந்து விலகக் காரணமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்