சமந்தாவுடன் நடிக்க ஆசை… வெளிப்படையாக அறிவித்த பாலிவுட் நடிகர்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (11:13 IST)
நடிகர் ஷாகித் கபூர் நடிகை சமந்தாவுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவரை மையக் கதாபாத்திரத்தில் வைத்து தெலுங்கில் ஒரு படம் உருவாகி வருகிறது. தமிழில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மட்டுமே உள்ளது.
சமீபத்தில் அவர் நடித்த பேமிலி மேன் சீசன் வெப் சீரிஸ் சர்ச்சைகளை கிளப்பி அவருக்கு எதிர்ப்பையும் ஆதரவையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரிடம் ரசிகர் ஒருவர் ‘பேமிலி மேன் சீரிஸில் சமந்தாவின் நடிப்பைப் பற்றி சொல்ல முடியுமா? எனக் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஷாகித் கபூர் ‘முழுமையாக அவரின் நடிப்பை ரசித்தேன். அவரோடு எப்போதாவது பணிபுரிய ஆசை படுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்