மும்பை விமான நிலையத்தில் காக்கவைக்கப்பட்ட ஷாருக் கான்… 6 லட்சம் தண்டம் கட்டி வெளியேற்றம்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (14:42 IST)
ஷாருக் கான் துபாயில் இருந்து திரும்பும் போது அவர் வசம் இருந்த ஆடம்பர கைக்கடிகாரங்களுக்காக 6 லட்சம் ரூபாய் அளவுக்கு சுங்கவரி கட்டியுள்ளார்.

துபாய் சார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்ற ஷாருக்கானுக்கு குளோபல் ஐகான் விருது வழங்கப்பட்டது. அங்கிருந்து தனியார் விமானம் மூலமாக திரும்பிய அவர் மும்பை விமான நிலையத்தில் சுங்கவரித் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவர் வசம் இருந்த 6 ஆடம்பர கைக்கடிகாரங்களுக்கு சுங்கவரி கட்டாததால் அவர் காக்க வைக்கப்பட்டார். பின்னர் அவற்றுக்கு 6.83 லட்சம் சுங்கவரி கட்டியபிறகு அவர் வெளியேறியுள்ளார். அந்த கைக்கடிகாரங்களின் மதிப்பு சுமார் 18 லட்சம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்