ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்கிறாரா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

vinoth

வெள்ளி, 16 மே 2025 (12:58 IST)
தன்னுடைய 73 ஆவது வயதிலு வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க ஷாருக் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் கூலி படத்தில் அமீர்கான் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷாருக் கான் நடித்த ‘ரா ஒன்’ என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்