டின்னருக்கு சென்றால் நான் பணமே எடுத்து செல்வதில்லை – ரசிகரின் கேள்விக்கு ஷாருக் கான் பதில்!

புதன், 28 அக்டோபர் 2020 (10:58 IST)
நடிகர் ஷாருக் கான் சமூகவலைதளத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடிகர் ஷாருக்கான் தனது ரசிகர்களுடனான உறவைப் பேணுவதில் எப்போதும் ஈடுபாடு காட்டுவார். சமூகவலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் அவரது கேள்விகளுக்கு பதிலளிப்பது என செயல்பட்டு வருவார். இந்நிலையில் இப்போது அவர் தன் ரசிகர் ஒருவர் கேட்ட வித்தியாசமான பதிலை அளித்துள்ளார்.

அந்த ரசிகர் பிரபலமாகாத உங்கள் நண்பர்களுடன் டின்னருக்கு சென்றால் நீங்களே பணத்தை செலுத்துவீர்களா அல்லது பகிர்ந்து கொள்வீர்களா எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஷாருக்  ‘இதில் பிரபலமாக இருப்பது முக்கியமே இல்லை. நான் எப்போதுமே டின்னருக்கு செல்லும் பணத்தை எடுத்து செல்வதே இல்லை’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்