வரும் வெள்ளியன்று 7 படங்கள் ரிலீஸ்! தேறுவது எத்தனை?

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (08:20 IST)
ஒவ்வொரு வாரமும் கோலிவுட் திரையுலகில் 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இருப்பினும் அதில் எத்தனை திரைப்படங்கள் வெற்றிப் படங்கள் என்பது கேள்விக்குரியது. பெரும்பாலான படங்கள் முதலீட்டைக் கூட பெறுவதில்லை என்பதே வசூல் நிலைமையாக உள்ளது 
 
இந்த நிலையில் வரும் வாரம் அதாவது ஜூலை 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 7 தமிழ் திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் வெளியான விக்ரமின் 'கடாரம் கொண்டான்' மற்றும் அமலாபாலின் 'ஆடை' ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஏழு திரைப்படங்கள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
சந்தானம் நடித்த ஏ1', விஜய் தேவரகொண்டாவின் 'டியர் காம்ரேட்', நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்', சமுத்திரக்கனி நடித்த 'கொளஞ்சி',  நுங்கம்பாக்கம், சென்னை பழனி மார்ஸ்' , ஆறடி ஆகிய ஏழு திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகிறது 
 
இதில் சந்தானம் நடித்த ஏ1' மற்றும் நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' ஆகிய திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமுத்திரகனியின் 'கொளஞ்சி', விஜய் தேவரகொண்டாவின் 'டியர் காம்ரேட்' ஆகிய திரைப்படங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இருப்பினும் இந்த படங்களின் விமர்சனங்களை பொறுத்தே அந்த படங்களின் வசூலும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்களில் எத்தனை படங்கள் வெற்றி பெறுகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்