வாரிசு’ ரிலீஸ் உரிமை: அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல நிறுவனம்!

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (17:11 IST)
விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது 
 
இந்நிலையில் விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து 'வாரிசு’ ஸ்க்ரீன் நிறுவனம் தியேட்டர்களை புக் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. ஏற்கனவே செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான தளபதி 67 படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்