ஜூன் 4ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை.. ஒரு வாரத்திற்கு பின் உடல் மீட்பு..!

Siva

செவ்வாய், 11 ஜூன் 2024 (09:34 IST)
பாலிவுட் சீரியல் நடிகை ஒரு வாரத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று தான் அவரது உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாலிவுட் சீரியல் நடிகை மாலபிகா தாஸ் என்பவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் மாலபிகா தாஸ் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது உடல் அழுகி தூக்கில் பிணம் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது ஜூன் 4-ம் தேதியே மாலபிகா தாஸ் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் தெரிய வருகிறது. அது மட்டும் இன்றி அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. தி ட்ரையல் என்ற சீரியலில் நடிகை கஜோல் உடன் மாலபிகா தாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்