நானே வருவேன் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:29 IST)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள நானே வருவேன் படத்துக்கான முதல் பாடலை யுவன் ஷங்கர் முடித்துக் கொடுத்துள்ளாராம்.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணீ 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கான பாடல்கள் மெட்டமைக்கும் பணியை இப்போது யுவன் ஷங்கர் ராஜா ஆரம்பித்துள்ளார். படத்துக்கான முதல் பாடலை முடித்துக்கொடுத்துள்ளாராம். அதைக் கேட்ட செல்வராகவன் ‘கடவுளே … என்ன மாதிரியான பாடலை இவர் மெட்டமைத்துக் கொடுத்துள்ளார்’ என வியக்கும் வகையில் பாராட்டியுள்ளார். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் உருவாகும் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்