டிவிட்டரில் புலம்பித் தள்ளிய இயக்குனர் செல்வராகவன்

வியாழன், 2 மார்ச் 2023 (08:26 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இடையில் அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படம் ரிலீஸாகி கணிசமான கவனத்தை ஈர்த்தது.

சமீபகாலமாக டிவிட்டரில் தொடர்ந்து தத்துவமழையாக பொழிந்து வரும் செல்வராகவன், தற்போது நண்பர்கள் இல்லாமல் தவிப்பதாக புலம்பித் தள்ளியுள்ளார். அதில் “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாக வேலையைத் தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாக இருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. எங்கு போய் நட்பைத் தேடுவேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்