இது திருப்பிக் கொடுக்கும் நேரம்… தனுஷ் இயக்கும் படத்தில் நடிகராக செல்வராகவன்!

செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (16:22 IST)
தமிழ் சினிமாவின் திறமைமிகு நடிகர்களில் ஒருவரான  தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார்.  இதை அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படம் தனுஷின் 50 ஆவது படமாக அமைய உள்ளது.

இந்த படத்தில் தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இருவரும் நானே வருவேன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை திறமையான ஒரு நடிகராக வளர்த்துவிட்ட அண்ணனுக்கு நன்றிக்கடனாக இதை தனுஷ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்