அமீர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும், இல்லையே.. மோகன் ஜி எச்சரிக்கை..!

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:13 IST)
இன்னும் மூன்று நாட்களில் அமீர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் உரிய ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் என்றும் பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி பேட்டி அளித்துள்ளார்.
 
இயக்குனர் அமீர் பகாசூரன் படம் குறித்து சமீபத்தில் பேசியபோது மோகன் ஜி படங்களை எச். ராஜா அண்ணாமலை ஆகியோர் உடனடியாக பார்த்து கருத்து சொல்லுகின்றனர் அவர்கள் ஏன் அசுரன் படத்தை பார்க்கவில்லை, தமிழ்நாட்டில் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்க பார்க்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
 
 இதற்கு பதிலளித்த மோகன் ஜி நான் பெரிதும் மதிக்க்கும் இயக்குனர்களில் ஒருவரான அமீரின் பேச்சு என்னை காயப்படுத்தி உள்ளது, ஒரு படத்தை தயாரித்து அததை ரிலீஸ் செய்வது எவ்வளவு கடினம் என்பது அவருக்கு தெரியும். இந்த படத்தில் எந்தவித சர்ச்சையும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறேன்
 
அமீர் அப்படி பேசி இருக்க கூடாது கலைஞர் டிவியிடம் படம் கொடுத்து விட்டேன் எனக் கூறிய திராவிட சித்தாந்தத்துடன் இணைந்து விட்டதாக என்னை விமர்சிக்கிறார்கள் .அமீர் இன்னும் மூன்று நாட்களில் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் இல்லை எனில் உரிய ஆதாரத்தை அவர் காண்பிக்க வேண்டும் என்றும் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்