ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வில்லனாகும் செல்வராகவன்… வரிசையாக குவியும் வாய்ப்புகள்!

வெள்ளி, 7 ஜனவரி 2022 (10:48 IST)
இயக்குனர் செல்வராகவனுக்கு இப்போது வரிசையாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதையடுத்து அவருக்கு வரிசையாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. விஜய்யின் பிகில் படத்தில் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்கத்தில் மான்ஸ்டர் புகழ் நெல்சன் இயக்கும் புதிய படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்தில் ஜித்தன் ரமேஷும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்