வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாநாடு படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், தாமதமாய் “மாநாடு“ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். !! @SilambarasanTR_ , @iam_SJSuryah அருமை. நண்பர்கள் @thisisysr @vp_offl மற்றும் படக் குழுவினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி ! எனத் தெரிவித்துள்ளார்.