தனுஷின் நானே வருவேன் கதை ‘இதை’ மையப்படுத்தியதா?

வியாழன், 30 டிசம்பர் 2021 (10:03 IST)
தனுஷ் இப்போது அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய நால்வர் கூட்டணி புதுப்பேட்டை திரைப்படத்துக்கு பின்னர் நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ், யோகி பாபு மற்றும் இந்துஜா ஆகியவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை செல்வராகவன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதையைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தேஜாவூ நிலையை ஒற்றி இந்த கதை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்