உங்களை எதற்கு இன்னொருவர் பார்த்து கொள்ள வேண்டும்: செல்வராகவனின் இன்றைய தத்துவம்!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:06 IST)
பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தத்துவம் மொழிகளை பதிவு செய்து வரும் நிலையில் இன்றைய ட்வீட்டில் உங்களை எதற்கு இன்னொரு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று டுவிட் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இயக்குனராக மட்டுமின்றி தற்போது நடிகராக பிஸியாக உள்ளார் செல்வராகவன் என்பதும் விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் தனுஷ் நடிக்கவிருக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் சற்று முன்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கையில் மிக கொடுமை என்னை பாத்துக்க யாருமே இல்லை என்ற புலம்பல் தான். உங்களை எதற்கு ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும்? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல, உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், அது கடவுளே உங்கள் உங்களை பார்த்து கொள்வது போல்’ என்று பதிவு செய்துள்ளார்
 
செல்வராகவனின் இந்த லேட்டஸ்ட் விட்டு வைரலாகி வருகிறது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்