"அவன் நிழல் நீயா" சீதக்காதி வீடியோ பாடல் வெளியானது !

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (18:32 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த  சீதக்காதி படத்தின் அவன் வீடியோ பாடல் தற்போது வெளியானது.


 
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் மூலம் மக்களை திரும்பிப் பார்க்க வைத்த பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சீதக்காதி .  விஜய் சேதுபதிக்கு இது 25வது படம். விஜய் சேதுபதியின் வயதான தோற்றம் படத்திற்கு  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அடையாளமே தெரியாத அளவுக்கு மேக்கப் போட்டு வயதான கெட்டப்பில் நாடக கலைஞராக நடித்திருந்தார்.
 
இப்படத்தில் மக்கள் செல்வனுடன் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்தனர் . மேலும்  96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , இப்படத்தின் அவன் பாடலின் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது .
 
இந்த வீடியோவை தற்போது 5 லட்சம் பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்