அமிர்தாப் அழைத்த பாசக்காரர்- பாக்கியராஜை பாராட்டிய சீனுராமசாமி !

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (22:03 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி   இயக்குநர், நடிகர் திரைக்கதை  ஆசிரியராக ஜொலித்தவர் கே.பாக்யராஜ்.  இவர்  16 வயதினிலே என்ற படத்தில் துணை இயக்குநராக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர்,  சுவர் இல்லாத சித்திரங்கள், கன்னிப்பருவத்திலே,  மெளன கீதங்கள், இன்று போய் நாளை வா,  தூறல் நின்னு போச்சு,  அந்த 7 நாட்கள் உள்ளிட்ட பல்வேறு  படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குநராகவும், நடிகராக செயல்பட்டு வருகிறார்.

இவரது பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், வாழ்த்துகள்  தெரிவித்து வருகின்றனர். இ ந் நிலையில் பிரபல இயக்கு நர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தாய்குலத்தின்
தரணிப்புகழ்
எம்.ஜி இராமசந்திரனின் கலைவாரிசு

கலைஞர் வியந்த
கலைஞன்

நாயகனை
கதை நாயகனாக்கியவர்

அமிர்தாப் அழைத்தும்
ஹிந்தியில் வென்றும்
தமிழுக்குத் திரும்பிய
தாய்நிலத்தின் பாசக்காரர்

எழுத்தாளர் சங்கத்தின்
நேர்மையான மை
KB அவர்களை நினைத்தே எழுதத்தொடங்கும் என் கை எனப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்