சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்! விஜய் சேதுபதி படம் என்னாச்சு!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (16:09 IST)
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் புது படத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கலைப்புலி எஸ் தாணு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இப்போதைக்கு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டு இருப்பதால் அந்த படங்களை முடித்து விட்டுதான் தாணுவுக்கு தேதிகள் கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்க வைத்து ஒரு படத்தை தயாரிக்க தாணு முடிவு செய்துவிட்டாராம். முதலில் அந்த படத்தை முடித்து பின்னர் விஜய் சேதுபதி படத்தை பின்னர் தயாரிக்கும் முடிவில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்