விஜய் ஜோடியாகிறார் ‘வனமகன்’ ஹீரோயின்?

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (18:18 IST)
விஜய் நடிக்கும் 62வது படத்தில், அவருக்கு ஜோடியாக சயிஷா நடிக்கலாம் என்கிறார்கள்.

 
‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் மட்டுமில்லாமல், படத்தில் இன்னொரு ஹீரோயின் கேரக்டரும் இருக்கிறதாம். அதில், ‘வனமகன்’ படத்தில் நடித்த சயிஷா நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்