அடிமைத்தனத்தில் இருந்து பெண்கள் வெளியே வர சத்யராஜ் கூறும் யோசனை

புதன், 2 மே 2018 (13:43 IST)
திரைத்துறையில் பெண்களுக்கு என தனி அமைப்பு தொடங்கும் முயற்சி கடந்த சில மாதங்களாக செய்யப்பட்டு நேற்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
 
இந்த அமைப்பின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில்  பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல்  , புஷ்கர் காயத்திரி , அம்பிகா , சச்சு , சரோஜா தேவி , ப்ரேம் , விவேக் பிரசன்னா , சுளில் குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியபோது, 'சாஸ்திரமும் , சடங்கும் , பண்பாடும் , கலாச்சாரமும் பெண்களை அடிமைகளாக தான் வைத்துள்ளது. இவற்றை பாதுகாக்க தான் மதம் மற்றும் ஜாதி போன்ற விஷயங்கள் இங்கே உள்ளது. இவற்றிலிருந்து பெண்கள் வீடுபெற வேண்டுமென்றால் பெண்கள் அனைவரும் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். பெண்கள் ஏன் அடிமையாக்கப்பட்டார்கள் என்பது தெரிந்தால் தான் அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியும்' என்று கூறினார்.
 
முன்னதாக தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் தலைவராக வைஷாலி சுப்ரமணியன் அவர்களும்  துணைத்தலைவராக ஏஞ்சல் சாம்ராஜ் அவர்களும்  பொதுச்செயலாளராக ஈஸ்வரி.V.P அவர்களும், துணை பொதுச்செயலாளராக மீனா மருதரசி.S அவர்களும் பொருளாளராக கீதா.S அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்