சமீபத்தில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பத்திரிக்கையாளர் சங்கங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும், அவரது வீட்டின் மீது கற்களை வீசியும் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் “ஒரு முறை தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவிடுகிறது. எனவே, யாராக இருந்தாலும் தவறான கருத்துக்களை பரப்பக்கூடாது. அப்படி யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கருத்தை தெரிவித்துவிட்டு அதை என்னுடைய கருத்து அல்ல எனக்கூறுவதை ஏற்கமுடியாது. எதற்கெடுத்தாலும் பெண்களை குறிவைத்து இழிவாக பேசுவது ஒரு பழக்கமாகிவிட்டது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.