ஃபேஸ்புக் அடிமையான மனைவியை கொலை செய்த கணவன்

வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (19:05 IST)
டெல்லி அருகேயுள்ள கூர்கான் என்ற பகுதியில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பைத்தியமாக இருந்த மனைவியை அவரது கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
கூர்கானில் ஹரி ஓம் என்பவரின் மனைவி 32 வயது லட்சுமி என்பவர் எந்த நேரமும் மொபைல் போனில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் மூழ்கி இருப்பார். வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது ஆகியவைகளை கூட செய்வதில்லை. தூங்கும் நேரம் தவிர மீது அனைத்து நேரத்திலும் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் லட்சுமி இருந்ததால் அவரை அவரது கணவர் கண்டித்துள்ளார். ஆனால் கணவரின் கண்டிப்பை லட்சுமி காதில் வாங்கி கொள்ளவில்லை
 
இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த ஹரி ஓம், மனைவியை கொலை செய்துவிட்டார். மறுநாள் லட்சுமியின் தந்தை வீட்டுக்கு வந்தபோது தனது மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து போலீசிடம் புகார் செய்தார். இதுகுறித்து தலைமறைவாகியிருந்த கணவரை கண்டுபிடித்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது தன்னுடைய மனைவி 24 மணி நேரமும் ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்ததால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் ஹரி ஓமை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்