தன்னை கலாய்த்த சதீஷுக்கு வாட்ஸ் ஆப்'ல் மெசெஜ் அனுப்பிய சத்யராஜ் - வீடியோ!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (08:26 IST)
தமிழ் சினிமாவில் நடிகர்களாக நிலைத்து நிற்பதும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு உள்ளிட்டவை மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

இதே நிலை தான் காமெடி நடிகர்களுக்கும், வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்திவரும் சதீஷ்.. விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தமிழ் படம் 2வில் வித்யாசமான பல கேட்ட கெட்டப்புகளில் நடித்திருந்தார். அதில் ஒன்று ‘நூறாவது நாள்’ படத்தில் மொட்டையடித்துக்கொண்டு ரெட் கலர்  உடையில் வில்லனாக  வந்த சத்யராஜின் கெட்டப். இந்த மேக் ஓவர் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட சதீஷிற்கு சத்தியராஜ் வாட்ஸ் ஆப்'ல் dear சதீஷ் சூப்பர்.. என்று மெஸேஜ் அனுப்பியிருக்கிறார். இதனை சதீஷ் மிகப் பெரிய விருது சத்யராஜ் சார் அவர்களிடமிருந்து என கூறி ஸ்க்ரீன்சாட் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்