விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் நகைச்சுவை கூட்டணி அமைத்து நடித்து வரும் நடிகர் சதீஷ், முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஹீரோக்களின் நெருங்கிய நண்பனாக காமெடி செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சதிஷ் தொடர்ந்து புது புது படங்களில் கமிட்டாகி வருகிறார்.
அதில் காமெடி நடிகர் சதீஷ் சற்று மாறுபட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் ஹாயாக நிற்பது போன்ற புகைப்படமொன்றை வெளியிட்டு " இந்த நேரத்துல இந்த போட்டோ அவசியம்தானா?" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை கண்ட நெட்டிசன்ஸ் " இதை நாங்க கேட்குறதுதுக்கு முன்னாடி நீங்களே கேட்டுக்கிட்டிங்களே பாஸ் பிரம்மாதம் என கிண்டலாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.