ரஜினியின் ’கூலி’ படத்தில் சத்யராஜ் நடிப்பது கன்பர்ம்.. என்ன கேரக்டர் தெரியுமா?

Siva
திங்கள், 27 மே 2024 (08:21 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் தற்போது சத்யராஜ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சத்யராஜ், ரஜினியின் நெருங்கிய நண்பர் என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அதாவது ’மிஸ்டர் பாரத்’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த், சத்யராஜ் ஒரே படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்னும் ஒரு சில நாட்களில் ஸ்ருதிஹாசன் நடிப்பதும் உறுதி செய்யப்படும் என்றும் ஸ்ருதிஹாசன் என்ற படத்தில் ரஜினியின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்