அந்த சமயத்தில் ரஜினி படம் ஒன்றில் ராதாரவி வில்லனாக நடிக்க இருந்தது. அங்கு சென்றப்போது வாழ்க்கையே பிடிக்கவில்லை, நடிக்கவே விருப்பமில்லை என்றெல்லாம் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அதற்கு சமாதானம் கூறிய ராதாரவி “நாங்க இருக்கோம் சார் பார்த்துக்கலாம்” என ஆறுதல் கூறிவிட்டு கிளம்ப இருந்திருக்கிறார்.
அப்போது அவரை அழைத்த ரஜினிகாந்த் “நீங்கள் என்னுடன் நடிக்க இருந்த படத்தில் உங்களுக்கு பதிலாக வில்லன் நடிகரை மாற்றியுள்ளனர். அதை கூறவே நான் உங்களை வீட்டிற்கு அழைத்தேன்” என தயங்கியப்படியே கூறியுள்ளார். ரஜினி தனது நண்பன் என்றாலும் தனக்கு அந்த படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் அதிருப்தி அடைந்துள்ளார் ராதாரவி.
இதுபோல சில படங்களில் வாய்ப்புகள் பறிபோனது குறித்து ஒரு நேர்க்காணலில் அவர் கூறும்போது, ”என்னதான் பெரிய கதாநாயகர்களாக இருந்தாலும் அவர்கள் நாம் பெரிதாக வெளியில் தெரிய கூடாது என நினைக்கின்றனர்” என மிக வெளிப்படையாக கூறியுள்ளார் ராதா ரவி.