சதீஷ் ஹீரோவாக நடிக்கும் வித்தைக்காரன் படத்தின் டீசர் ரிலீஸ்!

சனி, 22 ஜூலை 2023 (14:41 IST)
பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதையும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நடித்திருந்தார். இந்த படத்துக்குப் பிறகு சதீஷ் ஹீரோவாக மற்றொரு திகில் மற்றும் காமெடி திரைப்படமான ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இதையடுத்து இப்போது வித்தைக்காரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

மேஜிசீனியனாக சதீஷ் நடித்துள்ள இந்த படத்தில் தங்கம் மற்றும் வைரக் கடத்தல் கதைக்களமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. காமெடியை விட திரில்லருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதை டீசர் உறுதி செய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்