ஹீரோவாகும் தைரியம் இல்லை.... வில்லன் ஒகே: சதீஷ்

Webdunia
சனி, 26 மே 2018 (20:18 IST)
காமெடியன்கள் ஹீரோவாகி வரும் காலத்தில் ஹீரோவாகும் தைரியம் இல்லை என கூறியுள்ளார் சதீஷ். தமிழ்படம் 1 வாயிலாக சினிமாவில் அறிமுகமனவர் சதீஷ்.
 
 
தற்போது வித்தியாசமாக தமிழ்படம் 2 படத்தில் மெயின் வில்லனாக மாறி இருக்கிறார் சதீஷ். படத்தை குறித்து சதீஷ் கூறியது பின்வருமாறு...
 
தமிழ் படம் 2 முந்தைய பாகத்தைவிட பல மடங்கு சிரிக்க வைக்கும். இதில் நான் வில்லனாக கதாபாத்திர உயர்வு பெற்றுள்ளேன். இந்த படத்தில் எனக்கு 15 கெட்டப்கள். நான் சீரியஸாக பேசும் வசனங்களுக்கு எல்லாம் மக்கள் கைதட்டி சிரித்து ரசிப்பார்கள். 
 
எல்லா காமெடியன்களும் ஹீரோ ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சந்தானத்தை எடுத்துக்கொண்டால் ஹீரோ ஆவதற்கான தகுதிகளை வளர்த்து பின் ஹீரோ ஆனார். தன்னை ஹீரோவாக மாற்றிக்கொண்டு உடலை குறைத்து சரியான கதையை தேர்ந்தெடுத்தார். அதுதான் சரியான வழி. எனக்கு அந்த தைரியம் இல்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்