வடிவேலுவை கண்டுகொள்ளாமல் தலைப்பை அறிவித்த ஏஜிஎஸ்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (09:45 IST)
நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு நாய்சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது.

பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதையும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். திகில் மற்றும் காமெடி திரைப்படமான இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த படத்துக்காக பொருத்தமாக இருக்கும் என நாய்சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது. ஆனால் வடிவேலுவின் முத்திரைக் கதாபாத்திரமான நாய் சேகரை வைத்து இப்போது சுராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்த படத்துக்காக அந்த தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனத்தினரிடம் வடிவேலு சார்பாக கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த பிரச்சனை இழுபறியில் இருக்க, இன்று மாலை சதீஷ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப் போவதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அஸ்வின் ஆகியோர் அந்த போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு நாய் சேகர் என்றே வைக்கப்பட்டு உள்ளது. இது வடிவேலுவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்