ஏம்மா ஜூலி நீ நடிச்சது போதும்; ஒருத்தனும் உனக்கு ஓட்டு போட மாட்டான்: நடிகர் மற்றும் நடன் இயக்குனர் கடுப்பு!!

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (13:20 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியிலும் திரையுலகில் இருக்கும் சில நடிகர் நடிகைகள் மத்தியிலும் விவாத பொருளாக மாறியுள்ளது.


 

 
ஓவியாவிற்கு ஆதரவாக பலர் பதிவிட்டுவந்தாலும், ஜூலிக்கு எதிராக பலர் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் மற்றும் நடன் இயக்குனரான சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
சதீஷ் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவிற்கு நண்பராகவும், தலைவா படத்தில் விஜய்யுடனும், அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கு நண்பராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தனது பதிவில் சதீஷ், ஏம்மா ஜூலி நீ நடிச்சது போதும், எனக்கு ஒரு குடும்பம் கிடைத்து விட்டது என நடிப்பதை எல்லாம் பொறுத்துகொள்ள முடியவில்லை. ஒருத்தனும் உனக்கு ஓட்டு போட மாட்டான் என தெரிவித்துள்ளார்.
 

 
அடுத்த கட்டுரையில்