நடிகர் சதீஷ் பாடகராகிவிட்டாரா? வைரல் புகைப்படம்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (17:52 IST)
நடிகர் சதீஷ் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகி விட்ட நிலையில் தற்போது பாடகர் ஆகி விட்டதாகவும் தெரிகிறது. இது குறித்த புகைப்படம் ஒன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சதீஷ் பவித்ரா உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’நாய் சேகர்’ என்பதும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை சதீஷ் மற்றும் பவித்ரா பாடி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் குறித்து அப்டேட் விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ள நிலையில் சதீஷ் பாடகர் ஆகி விட்டாரா என்று கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்