பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் 'எம்.ஜி.ஆர் மகன்' – படப்பிடிப்பு துவக்கம் !

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (14:05 IST)
பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடிக்கும் புதிய படத்துக்கு எம்.ஜி.ஆர் மகன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனை வைத்து வரிசையாக வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். இதில் கடைசியாக வெளிவந்த சீமராஜா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து பொன்ராம் தனது அடுத்தபடத்தை சசிகுமாரை வைத்து இயக்குவதாக செய்திகள் வெளியாகின.

இப்போது அந்த படத்துக்கு எம்.ஜி.ஆர். மகன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சசிகுமாரோடு சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன்  இசையமைபாளராக அறிமுகமாகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்