சசிகுமார் ஜோதிகா நடித்த உடன்பிறப்பே படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?

vinoth
சனி, 6 ஏப்ரல் 2024 (10:31 IST)
இயக்குனர் இரா சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே என்ற படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் மினிமம் கியாரண்டி படங்கள்.  அந்த வகையில் இந்த படமும் உருவாகி இருந்தது.

இந்த படம் வெளியான போது மிகப்பெரிய சலனத்தை உருவாக்கவில்லை என்றாலும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

முதல் பாகத்தில் யார் யார் இந்த பாகத்தில் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இரா சரவணனே இந்த பாகத்தையும் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்