போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (11:28 IST)
ராஜவம்சம் மற்றும் தள்ளிப்போகாதே ஆகிய படங்கள் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

சசிகுமார் நடித்த ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் ‘ராஜவம்சம்’ திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்திக்கு முற்று புள்ளி வைத்தாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதே போல அதர்வா நடித்த தள்ளிப்போகாதே என்ற படமும் இன்று ரிலிஸ் ஆவதாக இருந்தது. ஆனால் போதுமான திரைகள் கிடைக்காததால் ரிலிஸில் இருந்து பின் வாங்கியுள்ளன. ஏற்கனவே டாக்டர் படம் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அரண்மனை 3 படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களும் சில ஹாலிவுட் படங்களுக்கும் பெருவாரியான திரைகள் ஒதுக்கப்பட்டு விட்டதால் ராஜவம்சம் மற்றும் தள்ளிப் போகாதே ஆகிய படங்களுக்கு திரைகள் ஒதுக்கப்பட முடியவில்லை. இதனால் அவை இரண்டும் பின் வாங்கியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்