மீண்டும் தொடங்கிய சர்தார் படப்பிடிப்பு… பிரம்மாண்ட செட்டில் கார்த்தி!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:43 IST)
பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவராகிய கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கார்த்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த டைட்டில் மோஷன் போஸ்டரில் இருந்து அவருடைய அடுத்த படத்துக்கு ’சர்தார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளோடு மீண்டும் சென்னையில் தொடங்கி நடைபெற்றது. பின்னர் கார்த்தி தான் நடிக்க உள்ள விருமன் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட செட்டில் இப்போது கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறாராம் இயக்குனர் மித்ரன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்