பணத்திற்காக ஆபாச படங்களில்..? இப்போ தலைவர் பதவிக்கு ஆசையா? - நடிகை ஸ்வேதா மேனன் மீது பகீர் புகார்!

Prasanth K

வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (10:22 IST)

மலையாளத்தில் பிரபல நடிகையான ஸ்வேதா மேனன் மீது அளிக்கப்பட்டுள்ள ஆபாச திரைப்பட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வந்தவர் ஸ்வேதா மேனன். சால்ட் அண்ட் பெப்பர் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ள நிலையில், இவரது கரம் என்ற புதிய படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகையாக மட்டுமல்லாமல் நடிகர் சங்க செயல்பாடுகளிலும் ஈடுபாட்டு காட்டி வரும் ஸ்வேதா மேனன், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா (AMMA) சங்கத்தின் நிர்வாகக் குழு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் மெனச்சேரி மார்ட்டின் என்ற சமூக ஆர்வலர் எர்ணாகுளம் சிஜேஎம் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார். ஸ்வேதா மேனன் பணத்திற்காக ஆபாசப்படங்கள், விளம்பரங்களில் நடித்ததாக புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி ஆபாச தடுப்பு சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அவரது நடிகர் சங்க தேர்தல் போட்டியில் பகிரங்கமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்