கடந்த வார இறுதியில் மீரா மிதுன்- சேரனின் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க வந்த கமல், அதற்கு விளக்கம் கொடுத்த போது " அப்படியெல்லாம் பார்த்தால் நீங்ககள் பேருந்து நெரிசலில் போகவே முடியாது என்று கூறினார். பின்னர், ஒரு சிலர் பேருந்தில் உரசுவதற்கென்றே வருவார்கள் என்று கூற... உடனே சரவணன் கைதூக்கி ஆமாம் சார், நான் கல்லூரி படிக்கும் போது இதை செய்திருக்கிறேன் என்று சொல்ல உடனே அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.
இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் பலரும் சரவணனுடன் கமலையும் சேர்த்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது பாடகி சின்மயி அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து, "பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒருவர் கூறுகிறார்". அதையும் ஒளிபரப்புகிறார்கள். இது பார்வையாளர்களுக்கும் நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பெண்களும் கைதட்டுகின்றனர்” என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.