’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு 4 விருதுகள்: சரத்குமார் வாழ்த்து..!

Mahendran
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (18:04 IST)
70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையர் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது:

70 - வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டதில், இயக்குனரும், தயாரிப்பாளருமான திரு.மணிரத்னம் அவர்கள் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்கு, சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி & ஒளிப்பதிவு என 4 பிரிவுகளில் நான்கு தேசிய விருதுக்கு தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கல்கி எழுதிய தமிழின் தலைசிறந்த நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாக்கப்பட்ட போது, பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தை  ஏற்று நடித்ததில் பெருமை கொள்கிறேன்.

மேலும், அனைத்து மொழிகளிலும் தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் கலைஞர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்