10 நாள் ஷூட்டிங் முடிந்த நிலையில் கதை விவாதம்… இயக்குனர் செய்யும் அட்ராசிட்டி!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:34 IST)
இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா இயக்கும் பொய்க்கால் குதிரை படம் தொடங்கியுள்ளது.

பாலிவுட்டில் பிசியான இயக்குனராக இருந்த பிரபுதேவா இப்போது தமிழ் சினிமாவில் நடிகராக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகிவரும் பொய்க்கால் குதிரை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது. இந்த படத்தை ஹர ஹர மகாதேவி மற்றும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி வருகிறார்.

கிட்டத்தட்ட 10 நாட்கள் படத்தின் சண்டைக் காட்சிகளை அவர் படமாக்கினார். ஆனால் இன்னமும் கதை உறுதியாகாததால் இப்போது தனது குழுவினரோடு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்