சின்னதம்பி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். முன்னணி தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டு சினிமாவுக்கு பைனான்ஸ் மட்டுமே கொடுத்து வந்தார்.