எம் ராஜேஷ் படத்தில் ஹன்சிகாவுக்கு ஜோடியான சாந்தணு!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (09:54 IST)
நடிகர் பாக்யராஜின் மகனான சாந்தனு திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடிக்க 15 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை. ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகாவை கதாநாயகி ஆக்கி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறாராம்.

வழக்கமாக காமெடி படங்களையே தனது கதைக்களமாக எடுத்துக்கொள்ளும் எம் ராஜேஷ், இந்த முறை முதல் முறையாக ஹாரர் களத்தில் புகுந்துள்ளாராம். 40 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கும் விதமாக ஊட்டியில் இப்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தைப் பற்றிய மற்றொரு தகவல் இப்போது வெளியாகியுள்ளது. படத்தில் ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடிப்பது சாந்தணுதானாம். சமீபகாலமாக மாஸ்டர் மற்றும் பாவக்கதைகள் மூலமாக சாந்தணுவுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்