பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியான புதிய போட்டியாளர் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:29 IST)
பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியான புதிய போட்டியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் சமீபத்தில் அமீர் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி ஆகி உள்ளனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைந்துள்ளார். அவர்தான் தொலைக்காட்சி சீரியல் நடிகர் சஞ்சீவ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பதும் தெரிந்ததே
 
சஞ்சீவ் உள்ளே வந்தவுடன் அவரை சக போட்டியாளர்கள் வாழ்த்தி வரவேற்கின்றனர் என்பதும் சஞ்சீவும் அனைவரிடமும் நலம் விசாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சஞ்சீவ் உள்ளே நுழைந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்