மீண்டும் தொடங்கப்படும் சங்கமித்ரா.. பட்ஜெட் இத்தனை கோடியா?

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (07:46 IST)
ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் சங்கமித்ரா. 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதும் 2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகிகளாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தமாகி இருந்தனர்.

ஆனால் பொருளாதார பிரச்சனை காரணமாக இந்த படம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து இப்போது பொன்னியின் செல்வன் வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுந்தர் சி.

இந்நிலையில் படத்தில் கதாநாயகர்களாக ஆர்யா மற்றும் பிருத்விராஜ் நடிக்க உள்ளதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பாகங்களாக உருவாகும் சங்கமித்ரா படத்துக்கு 180 கோடி ரூபாய் பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்