விஜய் படங்களை பார்த்தே வளர்ந்தேன்… சந்தீப் கிஷன் சரண்டர்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (11:03 IST)
நடிகர் சந்தீப் கிஷன் சுறா படத்தைக் கிண்டல் செய்து பதிவிட்ட டிவீட் ஒன்று சர்ச்சைகளைக் கிளப்பியது.

தெலுங்கு படங்களில் முன்னணிக் கதாநாயகனாக இருப்பவர் சந்தீப் கிஷன்.மேலும் இவர் தமிழிலும் யாருடா மகேஷ், மாயவன், மாநகரம் மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். இந்நிலையில் இவர் 2010 ஆம் ஆண்டு விஜய், தமன்னா நடிப்பில் உருவான சுறா படத்தை கேலி செய்யும் விதமாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து விஜய் ரசிகர்களுக்கு கோபத்துக்கு ஆளாகியுள்ளார். ஆனால் இப்போது விஜய்யைப் புகழ்ந்து சில கருத்துகளை தெரிவிக்க இரண்டையும் ஒப்பிட்டு மீம்ஸ்களும் பகிரப்பட்டன.

இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்துள்ள சந்தீப் ‘இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. நான் எப்போதும் விஜய் சாரின் படங்களைப் பார்த்தே வளர்ந்து வந்திருக்கிறேன். இடையில் ஒரு சினிமா ரசிகனாக நான் தொலைந்து போயிருக்கிறேன். பல கடினமான தருணங்களில் என்னை பலவழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார். இன்று நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்’ எனக் கூறி விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்