அஜித் 61 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சமுத்திரக்கனி… கதாபாத்திரம் பற்றி சொன்ன தகவல்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (16:40 IST)
அஜித் 61 படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் சமூகவலைதளங்களில் அதிகளவில் பரவி வருகின்றன.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் அசுரன் பட நடிகை மஞ்சி வாரியர் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை அவர் உறுதி செய்துள்ளார்.

அதுபோலவே சமுத்திரக்கனி நடிப்பதாக ஒரு தகவல் வெளிவந்த நிலையில், அவரும் அதை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் “அஜித் 61 படத்தில் ஒரு சிறப்பான கதாபாத்திரம். ஒரு சிறப்பான கதைக்களம். அதில் நமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா உள்ளிட்டவர்களும் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்