பாலாவின் வணங்கான் படத்தில் இணைந்த சமுத்திரக்கனி!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (07:59 IST)
சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில் இயக்குனர் பாலா தரப்பில் இருந்து ஒரு கடிதம் விளக்கக் கடிதம் வெளியானது. அதன்பின்னர் இயக்குனர் பாலா கதையில் சில மாற்றங்களை செய்து அருண் விஜய் நடிப்பில் அதே பெயரில் வணங்கான் படத்தை தொடர உள்ளதாக சொலல்ப்பட்டது. இந்நிலையில் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கதாநாயகி கீர்த்தி ஷெட்டியும் இப்போது மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் விலகிவிட்ட நிலையில் இப்போது ஆர் பி குருதேவ்வை புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

முதல் கட்ட ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடந்த நிலையில், அடுத்த கட்ட ஷூட்டிங் திருவண்ணாமலையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் சமுத்திரக்கனி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்