சமுத்திரகனியின் அப்பா சாதிப்பாரா?

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (12:06 IST)
சமுத்திரகனி இயக்கியிருக்கும் அப்பா திரைப்படம் நாளை வெளியாகிறது. கைக்குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை ஒரு நல்ல அப்பாவாக இருந்து இதில் பாடம் நடத்தியிருக்கிறார்.


 
 
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக சிவகுமார், மோகன்லால், சூர்யா, கௌதம், சகாயம், சேரன் உள்பட ஏராளமானோர் தங்களின் அப்பாக்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அந்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் நெகிழ்ச்சியானவை. 
 
நாளை வெளியாகும் அப்பா திரைப்படமும் ரசிகர்களை நெகிழ வைக்குமா? இல்லை அதிஉணர்ச்சியில் புரட்டியெடுக்கப்பட்ட உணர்ச்சி பண்டமாக படம் இருக்குமா?
 
நாளை தெரிந்துவிடும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
அடுத்த கட்டுரையில்